30/3/15

ஏப்ரல் 10-ல் ஐந்தாம் கட்ட பேச்சு.


சென்னை:
     போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக, 42 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், 14 பேர் கொண்ட அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.    இதன் முடிவில்  வரும் 10ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது சம்பளக் கமிஷன்.


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும், 30 லட்சத்துக்கும்

21/3/15

மார்ச்30: அடுத்தகட்டபேச்சுவார்த்தை.

சென்னை, மார்ச் 21

குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.

12/3/15

மார்ச்-20:மூன்றாம் கட்டபேச்சு வார்த்தை.

  சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்துக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

9/3/15

பிஆர்டிசி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பிஆர்டிசி ஊழியர்கள் நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வி:
 வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு.

3/3/15

பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: (12-3-2015)வெடித்தது கலவரம்:



      சென்னையில் நேற்று, போக்குவரத்து கழக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. இருப்பினும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.

2/3/15

இன்று ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை [இன்று 2-3-2015]தொடங்குகிறது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது.