05/08/13 அன்று காலை 9/30 மணிக்கு பணியாளர்கள் சம்மேளன பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் திரு எஸ்.ஷாஜகான், மாநில பொதுச் செயலாளர் திரு டி.வி.பத்மநாபன் தலைமையில் 20 பேர்கள் அடங்கிய குழு மாண்புமிகு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்களை சந்திப்பதற்கு சென்றோம். முன்னதாக சென்றிருந்த நமது பொறுப்பாளர்கள் 20 பேர்களுக்கு தேநீர் கொடுத்தபின் முதல் பார்வையாளர்களாக சந்திக்க அனுமதிக்கப்பட்டோம். அமைச்சர் கோரிக்கை பட்டியலை வாங்கிக் கொண்டு புகைப்படம் வேண்டாமே என அன்பு வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து அரசின் நிதி உதவி இந்த துறைக்கு தேவைப்படுவதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தோம். அவரும் விரைவில் தொடங்க இருக்கும் பேச்சு வார்த்தையில் விரிவாக பேசுவோம் என்றார். மேலும் கழக முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு நமது ஆலோசனைகளையும் ஒரு ஆவணமாக தயாரித்து விரைவில் கொடுங்கள் என கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து நமது போக்குவரத்துக் கழகங்களின் சேர்மன் மற்றும் போக்குவரத்துத் துறையின் முதன்மை அரசு செயலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை பட்டியலை அளித்தோம். இவரிடமும் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அது தொழிலாளியை சென்றடைய வேண்டுமானால் நிதி தேவை உள்ளது. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு ஒன்றுதான் இதற்கு தீர்வு என்பதை வலியுறுத்தினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக