19/6/13

தொழிற்சங்க இலக்கணம்தொழிற்சங்க இலக்கணம்.
=====================
தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்
எழும் வடுபடும் மறுபடியும் எழும்
அதன் குரல்வளை இறுக்கப்படும்
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்.

நீதிமன்றம்
கேள்விக்கணைகளைத் தொடுக்கும்
குண்டர்களால் தாக்கப்படும்
பத்திரிகைகளால் வசைபாடப்படும்
பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்.

ஓடு காலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்
சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்
கோழைகளால் நடு வீதியில் விடப்படும்
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்
அட்டைகளால் உறிஞ்சப்படும்
தலைவர்களால் கூட விற்று விடப்படும்.

………………..
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்!
இந்த வையகம்
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்.

ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்று கடமையாகும்
இதன் வெற்றி சர்வ நிச்சயமே.

{1940ம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிகையில்
ஈகிள்ஸ்விடப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது.}
Taken  fromதொழிற்சங்க{ செப்ரெம்பர் 28, 2009} இலக்கண ம் by-ttsfmdu.wordpress.com          


கருத்துகள் இல்லை: