21/10/13

தமிழ்நாடுஅரசு போக்குவரத்துகழகங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள்கூட்டமைப்பின், குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்.

        2013-ம் ஆண்டு அக்டோபர் 10ந்தேதி முதல் 19ம் தேதி வரை அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து கிளைகள் முன்பு பிரச்சாரமும்,அக்டோபர் 23ம் தேதி மண்டல அளவிலான உண்ணாவிரதமும் இருக்க ஏற்பாடு செய்துள்ளன.
  
அதற்காக வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கையின் விவரம் கீழ்கண்டுள்ளவாறு;-.

  
சென்னை உண்ணாவிரதம்;-
           
அன்பார்ந்த நண்பர்களே,இரண்டரை ஆண்டுகளாக ஓய்வுபெற்ற பணியாளருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்காமல் அரசும்,நிர்வாகமும் வஞ்சித்து வருகிறது. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன.இறுதியில்
27-08-2013 அன்று சென்னையில் 6500 பேர் பங்கு கொண்ட பிரமாண்டமான உண்ணாவிரதம் நடைபெற்றது.கோவையில் இருந்து 650 பேர் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும்,நன்றியையும் உரித்தாக்குகின்றோம்.
 
தொடர் போராட்டம்;- 
                     
கோவையில் உள்ள கட்சி சார்பற்ற சங்கங்கள் ஒன்று கூடி ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி 14-03-2013 மற்றும் 03-06-2013 தேதிகளில் கோவை H.O.முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.24-07-2013 ம் தேதி முதல்வர் அம்மா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் பிரமாண்டமான தர்ணாவை நடத்தினோம்.மேலாண்மை இயக்குநர்,போக்குவரத்து முதன்மை செயலர்,அமைச்சர்,.தி.மு..கொறடா,மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.முதல்வர் அம்மா அவர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்றதன்விளைவாக செயலர் மட்டத்தில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து விவாதித்தார்கள்.23-09-2013அன்று கோவை வந்த போக்குவரத்து முதன்மை செயலரை சந்தித்து கூட்டமைப்பின் சார்பாக மனு அளித்தோம்.விரைவில் பணம் கிடைக்க ஆவண செய்வதாகவும் அதற்காகத்தான் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம் என்றும் கூறினார்கள்.இவ்வளவு முயற்சிக்கு பின் ஜூலை2011 முதல் செப்டெம்பர் 2011 வரையிலான கமுட்டேசன் மட்டுமே கிடைத்துள்ளது.ஆனால் சேமநல திட்டத்தை ஏப்ரல் 2013 முதல் நிறுத்திவிட்டார்கள்.

 
பணியில் உள்ள அன்பர்களே,
           
காலம்,ேரம் பார்க்காமல்,வெயில்,மழை,குளிர் என்று பாராமல் உயிரை கொடுத்து பாடுபடுகின்றோம்.எல்லோரும் தீபாவளி,பொங்கல் லீவு வரும்போது  அன்றுதான் நாம் அதிகப்படியாக பணியாற்றுகின்றோம்.அப்படி இருக்கும் நாம்- நம்மை பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டாமா? உங்களிடம் தற்போதும் சேமநல திட்டத்திற்காக ரூ.50-00பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் ஏப்ரல் 2013 முதல் சேமநல திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். அது உங்களுக்கு தெரியுமா?
     
பென்சன் வேண்டுமென்று போராடியதன் விளைவாக 1998-ல் கொண்டுவந்தார்கள்.அரசு ஊழியரை போன்ற பென்சன்.ஆனால் அரசு பொறுப்பெடுக்காத பென்சன்!.அதுகூட இன்னும் இரண்டோ அல்லது மூன்றாண்டுகளோதான் கொடுக்க இயலும் என்கிறார்கள்.நாங்கள் சில காலம் பென்சன் பெற்றுவிட்டோம்.நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?.
   
ஏப்ரல் 2003 க்குப்பிறகு பணியில் சேர்ந்தவர்களை பென்சன் திட்டத்தில் சேர்க்கமாட்டார்களாம்.அதற்கு முன் பணியில் உள்ளவர்கள் PF பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தார்கள்.அதிகாரிகள் அதை புதுப்பிக்காததால் வட்டி இல்லை என்கிறார்கள்.வட்டி கணக்கிட்ட காலத்திற்கும் குறைந்த வட்டியே கணக்கிட்டதால் பணம் குறைந்து நமது பென்சன் திட்டம்?மரணப்படுக்கையில் கிடக்கிறது.
      
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையினை ,ஜனவரி 2006-க்கு முன் பணி ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும்.17-06-2009 க்கு முன் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப மற்றும்நிர்வாக மேற்பார்வையாளர்களுக்கும் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும்.தணிக்கையாளர்கள்,ஓட்டுனர் பயிற்சியாளர்களுக்கு 2010-லேயே ஊதிய ஒப்பந்த  பலன்களை தந்திருக்க வேண்டும்.காலம் கடத்தி தற்போதுதான் ஒப்பந்த பலன் வழங்கியிருக்கின்றார்கள்.அதுவும் தற்போது பணியில் இருப்பவர்களுக்கு 32ஆண்டு சர்வீஸ் முடித்தவர்களுக்கு ரூபாய் 4200-00 கிரேடு பே கொடுப்பதற்கு பதிலாக ரூபாய் 2600-00 கிரேடு பே மட்டுமே வழங்கியுள்ளனர்.
                      
ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த பலனும் இன்னும் கொடுக்கவில்லை.இதே போன்று ஓய்வு பெறும் முன் ஏதாவது காரணம் காட்டி ரெவ்யூ கொடுக்காமல் பென்சனை குறைக்க நடவடிக்கை  எடுக்கின்றனர்.ஓய்வு பெறும்போதே கிடைக்கவேண்டிய பணிக்கொடை கம்முட்டேசன்,லீவு சரண்டர்,சமூக பாதுகாப்பு திட்ட பணம்,வருங்கால வைப்புநிதி போன்றவைகளை தருவதில்லை.இதற்கு வட்டியும் தருவதில்லை.
                   
ஆனால் தராத கம்முட்டேசனுக்கு வட்டி போட்டு பிடித்துக்கொள்கிறார்கள்.நீதிமன்றத்தில் குறைந்த பட்சம் 6சதம் வட்டியுடன் 8 வாரங்களுக்குள் பணப்பலன் வழங்க வேண்டும் என்று பல தீர்ப்புகள் வந்துள்ளன.சட்டங்கள்,ியாயங்கள்,உரிமைகளை கடைப்பிடிக்க வேண்டிய அரசும்,நிர்வாகமும் இவைகளை காலில் போட்டு மிதிக்கிறது.

 
உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
                                                             
இரண்டரை ஆண்டுகளாக பணப்பலன்கள் வராமல் ஓய்வு பெற்றவர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.பலர் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.ஓய்வு பெற்றவர்கள் தன் துணைவியுடன் அனைத்து பேருந்திலும் போகலாம் என்பது அம்மா உத்திரவு. ஆனால் இந்த உத்திரவு இன்னும் புறநகர் பேருந்தில் அமுலாக்க மறுக்கிறது.பணியாளர் இருக்கும்வரை மனைவி,கணவனுக்கு பஸ்பாஸ் உண்டு. பணியாளர் இறந்தால் பஸ் பாஸூம் இறந்துவிடுவது அநியாயம் அல்லவா?.
 
போக்குவரத்துக்கழகங்கள்.
                
கிராமத்தையும் நகரத்தையும் இணைத்தது கழகங்கள்.பள்ளி முதல் கல்லூரிவரை இலவசம்.காவல்துறை,இசைக்கலைஞர்கள் முதல் மொழிப்போர் தியாகிகள்வரை இலவசம்.இதை வரவேற்கிறோம்.ஆனால் கழகங்களை இலாபத்தில் இயக்க வேண்டாம்-நஷ்டத்தை தவிர்க்க வேண்டாமா?மாநில அரசுகளுடைய ஓட்டுவங்கியாக போக்குவரத்துக்கழகங்களை பயன்படுத்தினார்கள்.இன்று ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய்ஐந்து நஷ்டம் மொத்தத்தில் ஏழாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள்.எல்லா கிளைகளும்-எல்லா பேருந்துகளும் அடமானம் வைத்தாகிவிட்டது.
                    P.F.லோன்
கிடைப்பதில்லை.நமது பணத்தில் இயங்கும் சொசைட்டிக்கு கூட நிர்வாகம் பிடித்த பணத்தை கொடுப்பதில்லை.அதனால் கடன் கிடைப்பதில்லை.திருமணத்திற்கு கடன் எழுதினால் தலைமையக வாசலில் கண்ணீர் மல்க நின்றிருந்தால்தான் திருமணத்திற்குமுதல்நாள் செக் தருவார்கள்.அதற்குள் பூட்டப்பட்டிருக்கும்.ஏன் ஒன்றாம் தேதி சம்பளம் கூட பத்தாம் தேதிக்கு சென்றுவிட்டது.எண்ணிலடங்கா சங்கங்கள் .நா,சபை போன்று கொடிகள்.தொழிலாளிக்கு என்ன பயன்?மெமோவுக்கு பதில் எழுத,இட மாறுதல் பெற,வண்டி போஸ்டிங் பெறக்கூட பணம் கொடுத்தால்தான் சங்க தலைவர்கள் திரும்பி பார்க்கிறார்கள்.
 
ஒன்றுபட்ட போராட்டம்.
                      
கோவை கழகத்தில் மட்டும் ஓய்வு பெற்ற 1500 பேருக்கு சுமார் ரூபாய் 150 கோடி பண பலன்கள் தரவேண்டும்.இரண்டரை வருடமாக இதற்கு வட்டியும் தருவதில்லை.முப்பது வருடம்,ாற்பது வருடம் பணியாற்றிவிட்டு ஓட்டாண்டியாய்  எந்த பலனும் இல்லாமல் ஓய்வு பெற்று செல்கின்றனர்.இந்த நிலை வேறு எங்கேனும் உண்டா? எனவேதான் ஓய்வு பெற்ற நாங்கள் கிளைகள்தோறும் உங்களை தேடி வந்துள்ளோம்.சிந்தியுங்கள்! வாழ்வில் மரணம் ஒருமுறைதான் வரும்.ஆனால் வெற்றியோ பலமுறை வரும்.வெற்றி கிடைக்க நாம் ஒன்று சேர வேண்டும்.அரசின்,ிர்வாகத்தின் அலட்சியத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.ஓய்வுபெற்ற மேலாண் இயக்குனர் முதல் கடைநிலை ஊழியர் வரை நாங்கள் தயார்!நீங்கள் தயாரா?வீட்டில் அமைதியாக இருந்து யோசியுங்கள்.
 
அணி சேர்வோம்! போராடுவோம்!!வெற்றி கிட்டும்வரை போராடுவோம்.

                                  
உண்ணாவிரதம்;-

நாள்;23-10-2013      நேரம்;காலை09-00 மணி முதல்-மாலை05-00மணி வரை.
இடம்;ோவை-காந்திபுரம்,தமிழ்நாடு ஓட்டல் முன்பு 
              
குடும்பத்துடன் ஒருநாள் உண்ணாவிரதம்
  
என 
   (
கோவை 08-10-2013 தேதியிட்ட பிரச்சாரத்திற்கான துண்டறிக்கை பிரசுரம்.)

(1) ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக பணியாளர்களின் பொதுநல சங்கம்-(மொபைல்-99527 18132),
  
(2) தமிழக போக்குவரத்து கழகங்களின் ஓய்வுபெற்றோர் ஊழியர் நலச்சங்கம்-(மொபைல்-99420 90541), 

 (3) பணி ஓய்வு பெற்றோர் நல சங்க பேரவை-(மொபைல்-98651 44005), 

 (4) போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர் நல சங்கம்-(மொபைல்-94423 47817),

(5) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் பணியாளர் சம்மேளனம்,(மொபைல்-94875 97019),

(6) தமிழக போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு சங்கம்
    -(மொபைல்-98652 94788),

(7) போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற அலுவலர் நல சங்கம்-(மொபைல்-93631 01012)

                 ஆகிய தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு-
          (கோவை,நீலகிரி,ஈரோடு,திருப்பூர்-கோயமுத்தூர் கோட்டத்தைச்சேர்ந்த ஓய்வு பெற்றோர்கள் சங்கங்கள்).
         

கருத்துகள் இல்லை: