13/12/13

ஓய்வூதியம் பெறுபவர்கள்,அகவிலைப்படியை 51 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தலாம் .

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 58 சதவீத அகவிலைப்படி வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
 சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப் படியை 51 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தலாம் என்றும், 1.7.2011 முதல் இதனை வழங்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைச் செயலாளர் கடந்த 2101–ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வூதிய நிதி அறக்கட்டளையின் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி .ஆறுமுகசாமி விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘‘போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தும் வகையில் ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் தகுந்த திருத்தம் செய்யவேண்டும். இதன்பின்னர், அந்த முன்மொழிவு ஆவணங்களை அறக்கட்டளையின் அதிகாரிகள், தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அவற்றை போக்குவரத்து துறை செயலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவினை 8 வாரங்களுக்குள் பிறப்பிக்கவேண்டும்என்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: