21/7/14

ஆங்கிலம்{ENGLISH].


ஆங்கிலம் கற்க ஒரு வலைபூ
[aangilam.blogspot.in]

-வழி-  ஆங்கிலம் கற்போம் வாருங்கள்.

ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)

ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன?

ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால்,
ஆங்கில பேச்சின்கூறுகளில்
உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases) மற்றும் வாக்கியத்தின் உட்கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும்வாக்கியக் கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கியத் தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.

இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்

இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கியக் கூறுகளை இணைக்க தனித்த ஒற்றை சொல், கூட்டுச்சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச்சொல்:
  • and
  • for
  • because
கூட்டுச்சொற்கள்
  • as long as
  • in order that
  • provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
  • so ... that
  • either ... or
  • not only ... but also
இணைப்புச்சொற்களின் வகைகள்

ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன?

ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:

Coordinating Conjunctions
Subordinating Conjunctions
Correlative Conjunctions
Conjunctive Adverbs

குறிப்பு:
ஆங்கில இணைப்புச்சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே  வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே  பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதை கருத்தில் கொள்க.

இனி இவ்விணைப்புச்சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.
மேலும் விரிவாக,முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
 ஆங்கில இணைப்புச்சொற்கள் (Conjunctions)

நன்றி [ http://aangilam.blogspot.in/]
&
HK Arun   
 ஆங்கிலம் கற்க ஒரு வலைபூ
  • Grammar
  • ========================================

கருத்துகள் இல்லை: