7/10/14

போனஸ்-கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை, அக்.- 7
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டம் மாநகர் போக்குவரத்துக் கழக தொ.மு.ச. அலுவலகத்தில் நடைபெற்றது.


கூட்டத்தில் தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., பி.எம்.எஸ்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., மற்றும் ஏ.ஏ.எல்.எப். ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2013–14ம் ஆண்டுக்கு எவ்வித பாகுபாடு மற்றும் உச்சவரம்புகளின்றி 25 சதவீத போனஸாக வழங்க வேண்டும் என அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை பட்டியல் அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை 22.10.2014 அன்று நெருங்கி வரும் நிலையில், வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே வழங்கப்படும் பண்டிகை முன் பணம் இது நாள் வரையில் வழங்கப்படவில்லை.
மேலும் போனஸ் வழங்குவது சம்பந்தமாக அரசு மற்றும் நிர்வாகங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை இக்கூட்டம் ஆழ்ந்து சிந்தித்து அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 10.10.2014 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகம், அனைத்து பணிமனை வாயில்களின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் உடனடியாக சங்கங்களை அழைத்து பேசி போனஸ் மற்றும் பண்டிகை முன் பணம் வழங்கிட முன் வர வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
=======================================================
@ www.maalaimalar.com/2014/10/07144753/transport-corporation-employee.html
============================================================

கருத்துகள் இல்லை: