20/9/13

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத டி.ஏ. அமைச்சரவை ஒப்புதல்


புதுடெல்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி..) உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில்  ிஏ உயர்த்தப்பட்டதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து
வருவதால் மக்கள்  கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து அறிவிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரி வந்தனர். கடந்த 2010ம்  ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜூலை 1, 2010 முன்தேதியிட்டு இந்த தொகை  வழங்கப்பட்டது.
அதன்பின், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை ஒற்றை இலக்கத்தில்தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வந்தது.  தற்போது, விலைவாசி உயர்வு காரணமாக 10 சதவீத அகவிலைப்படி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுகுறித்து டெல்லியில் இன்று காலை  ிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி  வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. உயர்த்தப்பட்ட 10 சதவீத அகவிலைப்படி கடந்த ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு  வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயன்பெறுவார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 8 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.  இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் அகவிலைப்படி 80 சதவீதமாக உள்ளது. இப்போது உயர்த்தப்பட்ட 10 சதவீதத்தையும் சேர்த்து  அகவிலைப்படி 90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 879 கோடி கூடுதலாக செலவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.  வழக்கமாக, மத்திய அரசு டி.. உயர்வு அறிவித்தவுடன், தமிழக அரசும் அதே சதவீதத்தை தனது ஊழியர்களுக்கு அறிவிக்கும். இதனால், தமிழக அரசு  ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: