24/2/14

சீர்படுமா? அரசு போக்குவரத்துத் துறை .

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளை பேருந்து  TN33-N2623,
24-02-2014 அன்று இப்பேருந்து மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி திரும்பி
வந்துகொண்டிருந்தபோது,
 அதிகாலை 2.30 மணி சுமாருக்கு-டமார் என்ற சத்தத்துடன்-முன்வலது டயர்
வெடித்துவேட்டுக்கிளப்ப,
ஓட்டுனரின் திறமையால் எந்த வித சேதமுமின்றி
பேருந்து நிறுத்தப்பட்டு மாற்று டயர் பொருத்தி இயக்கப்பட்டது.
  இதில் அதிசயம் என்னவென்றால் வெடித்த டயர் Original Radial ஆகும்.
அது என்ன Radial என்கின்றீர்களா?
Nylon நூலுக்குப் பதிலாக Steel கம்பிகள் கொடுத்து தயாரிக்கப்படுவத  Radial
டயர் ஆகும்.
Nylon டயரை விட அதிக தரம் வாய்ந்தது என்பதால் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துத் கழகதில் அதிகமாக  Radial டயர் வாங்கி பொருத்தப்படுகிறது.
அட இதில் தவறு என்ன?வினோதம்என்ன?. என்கிறீர்களா?.
அட Steel கம்பிகள் பொருத்தப்பட்ட புதிய JK Radial டயர் வேட்டுக்கிளப்பியது
மட்டுமல்ல வினோதம்.
 {பிரச்சனை என்னவென்றால் வேட்டுக்கிளப்பிய JK Radial டயரில் மருந்துக்குமட்டுமே Steel கம்பி கொடுத்து தயாரிக்கப்பட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சப்ளை செய்யப்பட்டதுதான். }
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறுபதம்.
 
{Radial கம்பி வலை}
ம் -என்றால் மெமோ, ஆ-என்றால் தண்டனை கொடுக்கத்
தயங்காத போக்குவரத்துக்கழகஅதிகாரிகள்
மேற்கண்ட டயரை என்ன தர ஆய்வு செய்து வாங்கினார்களோ!!
[என்ன சிதம்பர இரகசியமோ!!]
யாருக்கு தண்டனையோ? யார் கண்டது?. 
 பாவம் ஓரிடம் பலி வேறிடம்.

=============================================================================

5 கருத்துகள்:

Parameswaran C சொன்னது…

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பொது விசயங்களை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றிங்க.இதோ எனது வலைப்பதிவிலும் காண்க.
அரசு பேருந்தில் முன் டயர் வெடிப்பு-
Parameswaran Driver shared Kandh Praba's புகைப்படம்.
இக்கதைக்கான மாற்று தேர்வுகள்
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைங்க!இது???????!!!!!!!!..இது மட்டுமல்ல! பேருந்தின் கொள்ளளவுக்கும் அதிகமாக பயணிகளையும்,பள்ளிக்குழந்தைகளையும்,இலவச பயண அனுமதியாளர்களையும் ஏற்றிக்கொண்டு,மலைப்பாதையில்,ஹெல்பருக்காக பொருத்தப்படும் ஹெல்பர் ஸ்பிரிங் அசெம்பிளியோ,ஸ்பிரிங் மெயின்லீப் 180 டிகிரிக்கும் அதிகமாக சுழலாமல் இருக்க பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் ரப்பர் ஸ்டாப்போ,ஷேக் அப்சர்பரோ,இல்லாமல்(வாகன தயாரிப்பாளர் பொருத்தி அனுப்புகின்றனர் அது வேறு விசயம்) ஐம்பத்தைந்து நபரை மட்டுமே தாங்கும் தகுதியுள்ள பேருந்தில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அபாயமான நிலையில் ஓட்டுனரும்,நடத்துனரும் உயிரை பணயம் வைத்து பயணிக்கையில் முன் இடது ஸ்பிரிங் அசெம்பிளி பாரம் தாங்காமல் அதே சமயம் பாதுகாப்பில்லாத ஸ்பிரிங் மெயின் லீப் சுழல் கோணம் அதிக அளவு ஏற்பட்டு அதனால் நடுப்பகுதி உடைவு ஏற்பட்டு ஓட்டுனர் சாமார்த்தியத்தால் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி இருந்தும் கிளை நிர்வாகம் ஸ்பிரிங் லீப் எந்த பகுதி உடைந்தது என்று குறிப்பிடாமல் பொதுவாக ஓட்டுனர் உடைத்துவிட்டார்? என்று புகார் கொடுத்து அதற்கான தண்டனையும் அதாவது ஓட்டுனர் கவனக்குறைவாகவும்,ஆஜாக்கிரதையாகவும்,அதிவேகமாகவும்? (பேருந்து அளவான பயணிகள் ஏறினாலே இஞ்சின் இழுவைத்திறன் குறைந்து அதனால் முதல் கியரிலேயே ஓட்டும்நிலை அது வேறுவிசயம்) சாலையின் தன்மைக்கேற்ப இயக்காததே உடைவிற்கு காரணம் என சரியாக விசாரிக்காமல் நீதி வழங்கி தண்டனையும் கொடுத்துள்ளது.இந்த நிர்வாகம்.அதுபேலவே முன் டயரு வெடிப்பிற்கும் காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவு,அதிவேகம் காரணமாக என்று குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிப்பார் ஓட்டுனர்.இதற்காகவே சாலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக சமூக ஆர்வலர்கள்,சட்ட வல்லுனர்கள்,நீதியரசர்கள்,நெடுஞ்சாலைத்துறையினர்,ஓட்டுனர்,நடத்துனர்,போக்குவரத்து துறை அதிகாரிகள்,தொழில் நுட்ப பணியாளர்கள்,வாகன முதலாளிகள்,வாகன தயாரிப்பாளர்கள்,இயந்திரப்பொறியாளர் குழு,உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள்,விபத்து ஆய்வறிக்கை குழு,கல்வித்துறை சார்ந்தவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்ந்தவர்கள்,தினசரி பயணிக்கும் மக்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பொது விவாதம்,கருத்துக்களம், பொதுமக்கள் மத்தியில் நடத்த வேண்டும் உண்மைநிலை வெளிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.ஒத்துழைப்போமா?
Kandh Praba
6 மணி நேரம் முன்பு
· தொகுத்தது
சீர்படுமா? அரசு போக்குவரத்துத் துறை .

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கவுந்தப்பாடி கிளை பேருந்து TN33-2623,
24-02-2014 அன்று இப்பேருந்து மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி திரும்பி
வந்துகொண்டிருந்தபோது,
அதிகாலை 2.30 மணி சுமாருக்கு-டமார் என்ற சத்தத்துடன்-முன்வலது டயர்
வெடித்துவேட்டுக்கிளப்ப,
ஓட்டுனரின் திறமையால் எந்த வித சேதமுமின்றி
பேருந்து நிறுத்தப்பட்டு மாற்று டயர் பொருத்தி இயக்கப்பட்டது.
இதில் அதிசயம் என்னவென்றால் வெடித்த டயர் Original Radial ஆகும்.
அது என்ன Radial என்கின்றீர்களா?
Nylon நூலுக்குப் பதிலாக Steel கம்பிகள் கொடுத்து தயாரிக்கப்படுவது Radial
டயர் ஆகும்.
Nylon டயரை விட அதிக தரம் வாய்ந்தது என்பதால் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துத் கழகதில் அதிகமாக Radial டயர் வாங்கி பொருத்தப்படுகிறது.
அட இதில் தவறு என்ன?வினோதம்என்ன?. என்கிறீர்களா?.
அட Steel கம்பிகள் பொருத்தப்பட்ட புதிய Radial டயர் வேட்டுக்கிளப்பியது
மட்டுமல்ல வினோதம்.
{பிரச்சனை என்னவென்றால் வேட்டுக்கிளப்பிய Radial டயரில் மருந்துக்குக்கூட
Steel கம்பியோ வேறு எதுவுமோ கொடுக்கப்படாமல் முழுக்கமுழுக்க ரப்பரை மட்டுமேகொண்டு தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சப்ளை செய்யப்பட்டதுதான். }
ம் -என்றால் மெமோ, ஆ-என்றால் தண்டனை கொடுக்கத்
தயங்காத போக்குவரத்துக்கழகஅதிகாரிகள்
மேற்கண்ட டயரை என்ன தர ஆய்வு செய்து வாங்கினார்களோ!!
[என்ன சிதம்பர இரகசியமோ!!]
யாருக்கு தண்டனையோ? யார் கண்டது?.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறுபதம்.

thanks-- www.ttsftnstc.blogspot.in

www.ttsftnstc.blogspot.in/2014/02/blog-post.html

======================================

Parameswaran C சொன்னது…

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.பேருந்து எண் திருத்தம் TN33/N2623 என திருத்தம் செய்யவும்.நன்றிங்க.என அன்பன் parameswaran.c// konguthendral.blogspot.com// consumerandroad.blogspot.com// parameswarandriver.facebook.com

TTSFTNSTC சொன்னது…

தங்கள் கருத்துரைக்கும் ,பிழை திருத்தியமைக்கும் மிக்க நன்றி பரமேஸ்வரன் அவர்களே.

TTSFTNSTC சொன்னது…

மிக்க நன்றி பரமேஸ்வரன் அவர்களே.

Parameswaran C சொன்னது…

மரியாதைக்குரியவரே,வணக்கம்.இன்று காலை ஈரோடு பெங்களுரு நம்ம கழக பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸ் ஒன்றினை பார்க்க நேரிட்டதுங்க.காங்கேயம் கிளை நடத்துனர் திரு.R.ஜெகந்நாதன் பணியாளர் எண்;5312ஓய்வு பெற்று பி.எப் உட்பட எவ்வித பண பலனும் கொடுக்கப்படவில்லை என வருகிற 06-03-2014 முதல் காங்கேயம் கிளை முன்பு குடும்பத்துடன் அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆதரவுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளாரே!.அது பற்றிய கருத்தினை அல்லது நிகழ்ச்சியினை தொகுத்து பதிவிடுங்கள். என அன்பன் Parameswaran.c.TNSTC DRIVER-THALAVADI-ERODE DT.