20/4/14

2014-தேர்தலும்."நோட்டோ"வும்

2014-தேர்தல்.
போக்குவரத்து தொழிலாளியை
"நோட்டோவை" தேர்ந்தெடுக்க தள்ளிவிடாதீர்.
 ===========================================
 பத்திரிகை செய்திக் குறிப்பு:
போக்குவரத்துக் கழக பணியாளர்கள் "நோட்டா" விற்கு வாக்களிக்க முடிவு !!

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாநில செயற்குழுக் கூட்டம் 12/04/2014 காலை 10/30 மணி துவங்கி மாலை 4/00 மணி வரை திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க கட்டிட கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் திரு எஸ் ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எஸ்.சந்தானம், மாநில பொதுச் செயலாளர் திரு ட்டி.வி.பத்மநாபன், மாநில பொருளாளர் திரு எஸ்.சம்பத், மாநில அமைப்புச் செயலாளர் திரு எம்.கார்த்திகேயன், மாநில செயல் தலைவர் திரு தி.திருமலைசாமி மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    விரிவான விவாதங்களுக்குப் பிறகு ஏகோபித்த முடிவாக பின்வரும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Ø  போக்குவரத்துக் கழகங்களின் முழுப் பங்குத் (SHARE CAPITAL)தொகையும் அரசுக்கு சொந்தமானது
Ø  பேருந்து கட்டுமான பணிகள் என்பது 90 சதவீதம் தனியாரிடம்
Ø  பேருந்து இயக்கக் கொள்கைகளை முடிவு செய்வது அரசு
Ø  பேருந்து கட்டண நிர்ணயம் செய்வது அரசு
Ø  பேருந்து உதிரிபாகங்கள் யாரிடம் வாங்குவது, எவ்வளவு வாங்குவது என வழிகாட்டுவது அரசு
Ø  பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பலவீனப் பிரிவினருக்கு பாஸ் கொடுக்கச் சொல்வது அரசு
Ø  டீசல், உதிரிபாகங்களின் விலை நிர்ணயம் தனியார் முதலாளிகளிடம்
முற்றிலும் சேவை என்ற நிலையில் பேருந்து இயக்கச் செலவினத்தை ஈடுகட்டும் அளவிற்கு கூட வருவாய் இல்லை.
         விளைவு:
Ø  பணியாளர்களுக்கு முதல்தேதி சம்பளம் என்கிற உத்திரவாதம் இல்லை
Ø  பி.எப், உள்ளிட்ட பிடித்தங்கள் உரிய கணக்குகளுக்கு சென்று சேர்வது இல்லை
Ø  பி.எப் கடன், விடுப்பு சம்பளம், பணி முடிவு கணக்குகள் தீர்வு உள்ளிட்ட அனைத்தும் ஆண்டுக்கணக்கில் நிலுவை
Ø  அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வுகள் கிடைப்பதிலும் நீண்ட கால தாமதம்
Ø  புதிய பென்சன் திட்டம் என 2003ற்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் வஞ்சிப்பு
Ø  பொதுத்துறைகளை பாதுகாக்க கடந்த 30 ஆண்டுகளில் 19 தேசிய வேலை நிறுத்தங்கள் நடைபெற்ற போதும் அதில் பங்கு பெற்ற கட்சிகள், தமது தேர்தல் கால குறைந்த பட்ச திட்டத்தில் அது தொடர்பான முன்மொழிவுகள் இல்லை.
               இந்நிலையில்:
1]போக்குவரத்துக் கழகங்களை முழுமையாக அரசே ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் NOTO "நோட்டா" விற்கு வாக்களிப்பது, அனைத்து தொழிலாளர்கள் மத்தியில் இவற்றை கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
2) தேர்தல் முடிந்த மறுநாள் அனைத்து சங்க கூட்டமைப்பை ஏற்படுத்தி முதல் தேதி சம்பளம், அறிவிக்கப்பட்ட அகவிலைப்படிகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஒரு சக்தியான இயக்கத்தை முடிவெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
3) ஓய்வு பெற்றவர்களின் பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட பணி முடிவு கணக்குகள் ஆண்டுக்கணக்கில் தாமதப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சம்மேளனம் சார்பில் வழக்கு தொடர்வதென தீர்மானிக்கப்பட்டது.
                                                                          எஸ்.சம்பத்
                   மாநில பொருளாளர் மற்றும் சம்மேளன செய்தி தொடர்பாளர்.



கருத்துகள் இல்லை: