28/4/14

தினத்தந்தி செய்தி:பொதுக்குழு தீர்மானம்[27-4-2014]

அரசு போக்குவரத்து கழக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பணியாளர்கள்
சம்மேளன பொதுக்குழு தீர்மானம்
ஈரோடு,
அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று
பணியாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன ஈரோடு, கோவை,
திருப்பூர் மண்டல பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட தலைவர் டி.கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன், தலைவர்
எஸ்.ஷாஜஹான், அமைப்பு செயலாளர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு கலந்து
கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
நிதி வழங்கவேண்டும்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்கள் மீளமுடியாத கடன் சுமையில்
உள்ளது. இதனை தீர்க்க தமிழக பட்ஜெட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு
அரசு உரிய நிதி வழங்கவேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக
அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை சீர்படுத்த ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி
அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பிப்ரவரி 2013–ல் இருந்து அகவிலைப்படி
உயர்வு நிலுவை தொகை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை,
ஈட்டிய விடுப்பு சம்பளம், பென்சன் முன் கூட்டு தொகை, வைப்பு நிதி கடன் என
சுமார் ரூ.450 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதனை காலம் தாழ்த்தாமல் வழங்க போக்குவரத்து கழக நிர்வாகங்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
பணி நிரந்தரம்

தணிக்கையாளர்கள், ஓட்டுனர் பயிற்றுனர்களுக்கு வேலை நேரம் 8 மணி நேரமாக
நிர்ணயம் செய்ய வேண்டும். இவர்களுக்கு 2010 ஊதிய ஒப்பந்த உயர்வு பலன்களை
காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்
பலர் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்காக ‘ஆன் டூட்டி‘ அனுமதி
வாங்குகின்றார்கள். இதனை நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.

வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படும் புதிய ஓட்டுனர்,
நடத்துனர்கள் 240 நாட்கள் பணி முடித்தவுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் ஒரு நாள் பணிக்கு புறநகர் பஸ்களின்
இயக்கம் 200 கி.மீ. எனவும், நகர பஸ்களின் இயக்கம் 150 கி.மீ. எனவும்
நிர்ணயம் செய்ய வேண்டும்.

காலியிடங்களை..

காலியாக உள்ள 2 ஆயிரம் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர் பணி
இடங்களை நிரப்ப வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பதவி உயர்வு
வழங்கவேண்டும். பாதுகாவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சம்மேளனத்தின் கோவை மாவட்ட தலைவர் கே.குப்புசாமி, திருப்பூர்
மாவட்ட தலைவர் எம்.துளசிமணி, பொதுச்செயலாளர் ஏ.பெரியசாமி, பொருளாளர்
முருகானந்தம் உள்பட ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சம்மேளனத்தின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் கே.குணசேகரன் வரவேற்று
 பேசினார். முடிவில் பொருளாளர் ஆர்.ராகவேந்திரன் நன்றி கூறினார்.
நன்றி:
http://www.dailythanthi.com/2014-04-27-the-conference-board-to-fill-panels-or-erode-news
பதிவு
 செய்த நாள் : Apr 28 | 01:45 am

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஈரோடு:தினமலர்செய்தி:
பதிவுசெய்த:நாள்28-ஏப்2014-01:43
மாநிலத்தில், அரசு போக்குவரத்து கழகங்கள், வருங்கால வைப்பு நிதிக்கு,
1,500 கோடி ரூபாய், பென்ஷன் டிரஸ்டுக்கு, 700 கோடி ரூபாய் உள்ளிட்ட, 3,860
கோடி ரூபாய் கடன்கள் செலுத்தப்பட வேண்டி உள்ளதால், தமிழக பட்ஜெட்டில்
முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என,
அரசு போக்குவரத்து கழக
பணியாளர் சம்மேளனம் கோரியுள்ளது.

ஈரோட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் கோவை,
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின், 2013-14ம் ஆண்டு பொதுக்குழு
கூட்டம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் குணசேகரன், பொதுச்செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், தொழிலாளர்களின் வைப்பு நிதி,
பணிக்கொடை, பென்ஷன் முன் கூட்டுத்தொகை, சம்பள நிலுவை, விடுப்பு ஒப்படைப்பு,
கூட்டுறவு கடன், காப்பீடு, சிறுசேமிப்பு ஆகியவற்றுக்கு தொழிலாளர் சம்பள
பிடித்த தொகை மற்றும் கழகத்தின் அசையா சொத்துக்களை வங்கியில் அடமானம்
வைத்து, கடன் பெற்று, நிர்வாக செலவு, எரிபொருள், உதிரி பாகம் வாங்கியதன்
மூலம், தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.

இதனால், ஆயில் நிறுவனத்துக்கு, 60 கோடி ரூபாய், பஸ் பாடி கட்டியதில், 50
கோடி, விபத்து இழப்பீடு தொகை, 350 கோடி, வருங்கால வைப்பு நிதி செலுத்த
வேண்டியது, 1,500 கோடி, பென்ஷன் டிரஸ்டுக்கு, 700 கோடி, ஓய்வு
பெற்றவர்களின் பணிக்கொடை, 400 கோடி, சம்பளத்தில் பிடித்த, கூட்டுறவு
சங்கத்துக்கு செலுத்த வேண்டியது, 100 கோடி, காப்பீடு, வீட்டுக்கடன்
பிடித்தம் செலுத்தாது, 200 கோடி, கழகத்துக்கு சொந்தமான கட்டிடங்கள்,
நிலங்களை அடமானம் வைத்து வங்கி கடன், 500 கோடி, என, மொத்தம், 3,650 கோடியாக
கடன் உயர்ந்துள்ளது. கடனில் இருந்து கழகத்தை மீட்க, தமிழக பட்ஜெட்டில்,
5,000 கோடி நிதி ஒதுக்கி, நிர்வாக பணியில் கலெக்டர்களை நியமிக்க வேண்டும்.

போக்குவரத்து கழகங்கள் முடங்கும் நிலையில், ஆளும்கட்சி
தொழிற்சங்கத்தினர், மாநிலம் முழுவதுமாக, 3,000 பேர், ஓ.டி., (ஆன் டூட்டி)
எனும் பெயரில் வேலை செய்யாமல், ஆறு கோடி ரூபாய் சம்பளம் பெற்று, இழப்பை
ஏற்படுத்துவதை தடுக்கவேண்டும்.
அலுவலக பணியாளர், தொழில் நுட்ப பணியாளர்,
பாதுகாவலர், என, 2,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நீதிமன்ற தடையாணைப்படி, தொழில் நுட்ப பணிகளை, டெண்டர் விடுவதை தவிர்க்க வேண்டும்.
கூண்டு கட்டுமானம் செய்தல், வில் பட்டை அசெம்பிள் செய்தல், பேட்டரி,
ரோடியேட்டர் ஆகிய உதிரி பாகங்கள் வாங்கும்போது, தரத்துக்கு முக்கியத்துவம்
வழங்க வேண்டும்.
மருத்துவப்படி, ஈட்டி விடுப்பு, அகவிலைப்படி, பணிக்கொடை,
கம்யூடேஷன் தொகைகளை, காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

சம்பள பேச்சுவார்த்தைக்கு அழைத்து, ஒப்பந்தம் முடிந்த காலத்தில் இருந்து,
புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதாக, அரசு அறிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை, அரசு பரிசீலித்து தீர்வு காணாத பட்சத்தில், செயற்குழு
முடிவு செய்யும் நாளில், மண்டல அலுவலகம் முன் உண்ணாநிலை போராட்டம்
நடத்தப்படும், என அறிவித்துள்ளனர்.

thanks: http://www.dinamalar.com/news_detail.asp?id=963637