2/1/14

2011-2015 தமிழகமின்வாரிய ஊழியர் ஊதியஒப்பந்தம்.

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு
2011-2015-கான‌,ஊழியர் ஊதியஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை:
 மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 7 சதவீதம் சம்பள உயர்வு
வழங்கப்படும்;  [ரூ.700 முதல் 13,000 வரை உயர்வு.]
25 மாத நிலுவைத் தொகை, இரண்டு தவணையாக வழங்கப்படும்'.
'இப்புதிய ஊதிய உயர்வு, 2011 டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, நடைமுறைக்குவரும். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம், 2011
டிசம்பர், 30ல் முடிவடைந்தது.


முதல்வர் உத்தரவு
புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த, ஊதிய மாற்றக்குழு அமைக்க, முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, ஊதிய மாற்றக்குழு, 2011 டிசம்பர், 16ல்
அமைக்கப்பட்டது.

இக்குழு, 15 தொழிற்சங்கங்களுடன், பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்து, ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், முதல்வர் ஜெயலலிதா, ஊதிய உயர்வை அறிவித்துள்ளார்.

 இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும்
தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான
ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளுஒப்பந்தம்
30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய
ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக்குழு ஒன்றினை அமைக்கஉத்தரவிட்டிருந்தேன். அதன்படி ஊதிய மாற்றக்குழு ஒன்று 16.12.2011ல்அமைக்கப்பட்டது.

 இந்த ஊதிய மாற்றக் குழு, 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்று
பேச்சுவார்த் தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்டகருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கீழ்க்காணும் ஊதிய உயர்வினை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இதன்படி

1. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும்
தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ் வொருவருக்கும் தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும். 

2. இந்த ஏழு விழுக்காடு ஊதிய உயர்வு காரணமாக, ஒவ்வொரு தொழிலாள ருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 700 ரூபாயும், அதிகபட்சம் 13,160 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

3. பத்து ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றிய வர்களுக்கு பணிக்கால பயனாக ஓர் ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

4. தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொறுத்த வரையில், அரசாணை எண் 237, நிதித் துறை நாள் 22.7.2013-ன்படி தமிழக அரசு அலுவலர்களுக்கு
அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான  கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.

5. காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக் கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கப் படும்.

6. தற்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் மாற்றமின்றி தொடர்ந்து
வழங்கப்படும்.

7. தற்போதுள்ள படிகள் மற்றும் சிறப்பு ஊதியம்  மாற்றமின்றி தொடர்ந்து
வழங்கப்படும்.

8. தற்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.

9. பணியில் சேர்பவர்களுக் கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும்.
 பயிற்சி காலத்தில் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். தற்போது ஓராண்டிற்கு
குறைவாக பயிற்சி காலம் உள்ள பதவிகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும்.  
பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் (ஊதியம் மற்றும் தர ஊதியம்)
வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு  வரும்.

10. இந்த ஊதிய உயர்வு 1.12.2011 முதல் நடைமுறைக்கு வரும். 1.12.2011 முதல்
31.12.2013வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை ஜனவரி 2014-லும், இரண்டாவது தவணை ஏப்ரல் 2014-லும் வழங்கப்படும்.

11. இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் 1.12.2011 முதல் 30.11.2015 வரை நான்கு
ஆண்டுகள் அமலில்இருக்கும்.

இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70,820 பணியாளர்கள் மற்றும்  10,160
அதிகாரிகள் என மொத்தம் 80,980 பணியாளர்கள் பயன் பெறுவர்.

இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான
 கழகத்திற்கு ஆண்டொன் றுக்கு 252 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

  ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்கும் வகையில் 525 கோடி ரூபாய்செலவு
ஏற்படும். இச்செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக
நிதியிலிருந்தே மேற்கொள் ளப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்படுவ தோடு, அவர்கள் ஊக்கத்துட னும், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் தங்கள் கடமைகளை ஆற்ற வழி வகுக்கும்."
இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
========================================================

கருத்துகள் இல்லை: