21/1/14

சேலத்தில் TTSF ஆர்ப்பாட்டம்[21-1-14]





 12 ‍வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசக்கோரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்.
இன்று காலை சரியாக 10.00 மணிக்கு,சேலம் {தொழிலாளர் 
துறை ஆணையர்  அலுவலகம் அமைந்துள்ள} மாவட்ட
ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக  எழுச்சிகரமான
ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

 சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,
சேலம்மண்டலப் பொதுச் செயலர் டி.சேகர் தலைமை வகிக்க‌
மாநிலச் செயல் தலைவர் டி.திருமலைச்சாமி முன்னிலையில்,
மாநிலத் தலைவர்
ஷாஜகான்  அவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
,
 முன்னிலை:
திரு.C.மாரப்பன். {அமைப்புச் செயலாளர்,ேலம்.}
திரு.M.ரங்கநாதன் .{அமைப்புச் செயலாளர்,தருமபுரி.}
திரு.B.முர்த்தி. {அமைப்புச் செயலாளர்,ோவை.}
திரு.V.குணசேகரன். {அமைப்புச் செயலாளர்,ஈரோடு.}
திரு.M.சோமு. {அமைப்புச் செயலாளர்,ிருப்பூர்.}
ஆகியோர் முன்னிலை வகிக்க,
 சிறப்புரை:
திரு.K.குணசேகரன்,    [மாநில இணைசெயலாளர்,
                       ஈரோடு பொதுச் செயலாளர்]
திரு.V.மனோகரன்,     [ சேலம் கோட்டச்செயலாளர்]
திரு.N.சேகர்,          [தருமபுரி பொதுச் செயலாளர்]
திரு.A.பெரியசாமி,     [திருப்பூர் பொதுச் செயலாளர்]
திரு.K.இளங்கோவன்,   [கோவை பொதுச் செயலாளர்]
திரு.P.மனோகரன்,      [சேலம் மண்டல தலைவர்]
திரு.T.K.பாலகிருஷ்ணன்,[ஈரோடு மண்டல தலைவர்]
திரு.A.சம்பத்குமார்,      [தருமபுரி மண்டல தலைவர்]
திரு.M.துளசிமணி       [திருப்பூர் மண்டல தலைவர்]
திரு.K.குப்புசாமி    [கோவை மண்டல தலைவர்]

ஆகியோர்

"அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய
ஒப்பந்தம் ஏற்படுத்தும் நடைமுறை கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
 இந்த நிலையில், 11-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 31.8.13 அன்றுடன்
முடிவடைந்துவிட்டது.

 இதுதொடர்பான கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே
 அரசிடமும், தொழிலாளர் ஆணையரிடமும் சமர்ப்பித்துவிட்டன. இருப்பினும்,
மாநிலத் தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான நடவடிக்கையை
இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
 எனவே, தொழிற்சங்கத் தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்,
 2010 தொழிற்சங்கத் தேர்தலில் குறைந்தது 10 சத வாக்குகள் பெற்ற
தொழிற்சங்கங்களை அழைத்து உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த
அரசு உத்தரவிட வேண்டும் என"
வலியுறித்தி பேசினர்.
===================


 சேலம்,தருமபுரி,கோவை,ஈரோடு மற்றும் திருப்பூர்
மண்டலங்களைச்சேர்ந்த முன்னனித்தொழிலாளர்கள்
எழுச்சியுடன் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்டவாறு
கோசங்கள் முழங்கின.


எழுச்சிமிகு ஆர்ப்பாட்டகோசங்கள்
===========================
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக,
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக,
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்,
பணியாளர்கள் சம்மேளன போராட்டம்,
ஆணையமே... ஆணையமே..,
தொழிலாளர்துறை ஆணையமே..,
கோரிக்கை வச்சோ..ம் கோசமும் போட்டோம்,
கண்டுக்கல கண்டுக்கல,
போ ...க்குவரத்து நிர்வாகமும்,
கண்டுக்கல கண்டுக்கல,.

ஆ..ணையமே... ஆ..ணையமே..,
மாநில‌தொழிலாளர்  ஆணையமே..,

முதலாளிதான் முதலாளிதான் ,
அரசும்கழகமும்  முதலாளிதான்,
அவங்க.. உங்க.. கட்டுப்பாட்டில்தான்,

ஆனா ஏனோ.. பாராமுகம்?.
அசைந்து கூட.. கொடுக்கலையே,

ஆலாய் பறக்கிறான் தொழிலாளி
அத்தியாவசியபணியின் அச்சா...ணி

ஆ..ணையமே... ஆ.ணையமே..,
தொழிலா..ளர்  ஆணையமே..,
98 தீ..ர்ப்பின்படி,
தொழிலாளர் துறைதா..ன் துவக்கவேணும்,

மாநில அளவில் பேச்சுவார்த்தை,
மறந்துபோச்சு மறந்துபோச்சு ,

நீதி..மன்ற தீர்ப்புக்கூட,
மறந்தா போச்சு மறந்தாபோச்சு ,

சட்டத்தோட வழக்கம் உண்டு,
மூன்றா..ண்டு ஒப்பந்தம்முடிஞ்சா,
புதிதாய்ஒப்பந்தம் போடணும்[முனு]
புதியஊதியம் சலுகையும் தரணும்[முனு,]
சட்டத்தோட வழக்கம் உண்டு,

ஆ..ணையமே... ஆ..ணையமே..,
மாநில‌தொழிலாளர்  ஆணையமே..,
அலட்சியமா?..அலட்சியமா?.,
அரசு முதலாளி என்றா..லே
அலட்சியமா?.,அச்சமா?,

உடனே துவக்கு உடனே துவக்கு,
ஊதியமா..ற்று பேச்சு வார்த்தையை
உடனே துவக்கு உடனே துவக்கு,
துணைபோகாதே துணைபோகாதே,
அரசு கழக அலட்டசியத்திற்கு,
துணைபோகாதே துணைபோகாதே,

ஆ..ணையமே... ஆ..ணையமே..,
மாநில‌தொழிலாளர்  ஆணையமே..,
லட்சத்துக்குமேல் தொழிலாளி,
ஆயிரக்கணக்கில் ஓய்வூதியரென,
அரசுப் பேருந்து கழகத்தில்,
அனைத்து மக்கள் சேவையில்,
அல்லும் பக‌லும் உழைக்கின்றோம்,
அல்லும் பக‌லும் உழைத்திட்டோம்,

ஆனா அரசோ கழகமோ,
அசையாம இருக்கு,
அழுத்தத்தோட இருக்கு,
வேணாம் வேணாம் விஷப்பரிட்சை,
வேலை நிறுத்தம் போராட்டமென,
வீணா சங்கை ஊதிடாமே,

விரைந்து செயல்படு விரைந்து செயல்படு,
வேண்டியதை.. கொடுத்து,
விரைந்து செயல்படு விரைந்து செயல்படு,

சேவைத் துறையை காத்திடு,
தொழிலாளர் சேமம் காத்திடு,

ஆ..ணையமே... ஆ..ணையமே..,
மாநில‌தொழிலாளர்  ஆணையமே..,
உடனே துவக்கு உடனே துவக்கு,
ஊதியப் பேச்சை உடனே துவக்கு,

பிடிக்காதே பிடிக்காதே,
தும்பை விட்டு வாலை நீயும்,
பிடிக்காதே பிடிக்காதே,

தூண்டாதே தூண்டாதே ,
வேலை நிறுத்தம் செய்திட,
தூண்டாதே தூண்டாதே ,

காத்திடு காத்திடு ,
தொழில் அமைதியை காத்திடு,
கெடுக்காதே கெடுக்காதே,
தொழில் அமைதியை கெடுக்காதே,

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக,
தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக,
================================






நன்றியுரை:‍
  திரு.C.முத்து,[பொருளாளர் சேலம்]  நன்றி உரை ஆற்ற ,12 ‍வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசக்கோரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம்
நடத்திய‌ ஆர்ப்பாட்டம், மிகப்பெரும் எழுச்சியுடனும், எதிர்பார்ப்புடனும் முடித்து வைக்கப்பட்டது.
=======================================================================


கருத்துகள் இல்லை: