3/1/15

11 பேர் குழு.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை 11 பேர் கொண்ட குழு அமைத்து அரசு உத்தரவு 

சென்னை,
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 31-ந்தேதி போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில்  உடன்பாடு ஏற்பட்டு 4 நாட்களாக நீடித்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத் தம் வாபஸ் பெறப்பட்டது.
பேச்சு வார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான  முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்து இருந்தார். அதன் படி அரசு போக்குவரத்து தொழிலாளர் களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்துவதற்கான குழுவை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.
இதுகுறித்து கவர்னர் ஆணைப்படி, தமிழக அரசு கூடுதல் தலைமை செய லாளர் பிரபாகரராவ் வெளி யிட்டுள்ள அரசு உத்தரவில்
அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்து கொள்வதற்கு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து அரசு இதன்மூலம் ஆணையிடுகிறது.
இந்த குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் நிர்வாக இயக்குனர், அரசு விரைவு போக்குவரத்து கழகம், மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவன இணை நிர்வாக இயக்குனர், சென்னை போக்குவரத்து துறை அலு வலக முதுநிலை துணை மேலாளர் (நிர்வாகம்) ஆகிய 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: