17/8/15

செப் 2–ந்தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2–ந்தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

சென்னை,

மத்திய அரசு போக்குவரத்து சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம்
போக்குவரத்து துறையில் தனியாரை அனுமதித்திட சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கை உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 2–ந் தேதி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் ஆலோசனை கருத்தரங்கு டெல்லியில் 3 நாள் நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து
 தொ.மு.ச. பேரவை,
சி.ஐ.டி.யு. ,  ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்.
டி.டி.எஸ்.எப். உள்ளிட்ட
 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
அகில இந்திய அளவில் அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அனைவரும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 2–ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுத்தனர்.

கருத்துகள் இல்லை: