23/4/15

6 (113)சதவீதம் அகவிலைப்படி உயர்வு

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகவிலைப்படி உயர்வு

  மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.



இதையொட்டி, தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

ரூ.366 முதல் ரூ.4,620 வரை

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366 முதல் ரூ 4 ஆயிரத்து 620 வரையில் சம்பள உயர்வு கிடைக்கும்.

18 லட்சம் அலுவலர்கள்

இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர்.

அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.1,222 கோடியே 76 லட்சம் செலவாகும்.

இவ்வாறு அந்த அறிக்கை6யில் கூறப்பட்டு உள்ளது.

அரசுக்கு நன்றி

அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜன், என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி, தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.கே.இளமாறன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- உடற்கல்வி இயக்குநர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.சங்கரப்பெருமாள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் ஆகியோர் அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

மத்திய அரசு கடந்த 7-ந்தேதி 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 55 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இந்த அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது மாநில அரசும் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: