10/4/15

ஏப்ரல் 13-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை.

    அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி, ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து தொழிலாளர்களின் 12-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்தான, 5-வது கட்டப் பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டை மாநகர பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் போக்குவரத்துச் செயலாளர் உள்பட 14 பேர் கொண்ட குழுவும், 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலா 2 பேர் வீதம் 84 பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதில், தொழிலாளர்களுக்கு வேலைப் பளுவை குறைப்பது, தற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதது. இருப்பினும் தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் குறித்த கோரிக்கையை இறுதிசெய்வதில் முட்டுக்கட்டை நீடிப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஏப்ரல் 13 ஆம் தேதி 6-வது கட்ட பேச்சுவார்த்தையை தொடருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக 4 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்காத மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.


கருத்துகள் இல்லை: