15/5/17

தற்கொலை முயற்சி!

விழுப்புரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்தற்கொலை முயற்சி!

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனால் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து இயக்கம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முதலே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டதை கடிதம் எழுதி எழுத்துப் பூர்வமாக அமைச்சரிடம் அளிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். கடிதத்தை வாங்க மறுத்த அமைச்சர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


ஆனால், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதியளிக்காததால், வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி துவங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து, "பணிமனை ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களை ஆகியோரை வைத்து பேருந்துகள் இயக்கப்படும். வேலை நிறுத்தப் போராட்டம் முறியடிக்கப்படும்" என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

This article will continue after this advertisement


ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அரசு பேருந்துகள்  இயங்காததால், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மக்களின் நலனுக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், விழுப்புரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் ஹென்றி என்பவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பணி செய்ய வற்புறுத்தியதால், அவர் அரசுப் போக்குவரத்து பணிமனையின், 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதில் ஹென்றிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


http://www.vikatan.com/news/tamilnadu/89338-goverment-bus-driver-attempts-suicide-in-villupuram.html

15-05-2017 07:24:18
- இரா. குருபிரசாத்

கருத்துகள் இல்லை: