22/7/13

பணியாளர்கள் சம்மேளனத்தின் 5 ஆவது மாநில மாநாடு,-தினமணி.காம்

போக்குவரத்துக் கழகங்களை முழுமையான அரசுத் துறையாக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளன மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
   அவனியாபுரம் பை-பாஸ் சாலையில் உள்ள -அசல்மலபார் மாளிகை-திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் (மதுரை) 5 ஆவது மாநில மாநாடு, சனிக்கிழமை நடைபெற்றது.


  மாநிலத் தலைவர் எஸ். ஷாஜகான் தலைமை வகித்தார். இணை பொதுச் செயலர் எஸ். முருகேசன் வரவேற்றார். சம்மேளன நிறுவனத் தலைவர் ஜி. வெங்கட்ராமன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

  போக்குவரத்துத் துறையை முழுமையான அரசுத் துறையாக்கி, ஊழியர்களை நேரடி அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களின் ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கவேண்டும். டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை ஏற்றத்தை அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும். மக்கள் அதிகமாக செல்லும் முக்கிய நேரங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதனை தடுத்து, அரசு பேருந்துகளின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    240 நாள்கள் பணி செய்த நிலையில், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாநில பொதுச் செயலர் டி.வி. பத்மநாபன், மாநிலப் பொருளாளர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாரியப்பன் நன்றி கூறினார்.


thanks ; http://dinamani.com/edition_madurai/madurai/2013/07/22/ article1695558.ece
22 July 2013 02:34 AM IST
=========================================================================



கருத்துகள் இல்லை: