26/7/13

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு

 அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 வரை சம்பளம் உயர்வு: 60 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்
6-வது ஊதியக் குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3000 வரை சம்பளம் உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 60 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்.



மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6-வது ஊதியக்குழு கடந்த 2009-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

6-வது ஊதியக்குழு சம்பள உயர்வில், குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து அரசு செலவீனத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 6-வது ஊதியக்குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தக்குழு, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கருததுக்களை கேட்டது. இதைத்தொடர்ந்து குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்தது.

இந்த நிலையில் அந்தக்குழுவின் பரிந்துரையை ஏற்று விவசாயம் மற்றும் மண்வளபாதுகாப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை சம்பள உயர்வு அளித்து நேற்று ஒரே நாளில் தனித்தனியே துறை வாரியாக 20 அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அரசின் இந்த உத்தரவின்மூலம் 43 பிரிவுகளைச்சேர்ந்த 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உத்தரவைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்து துறைவாரியாக பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன.

இது குறித்து, என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ.சூரிமூர்த்தி கூறுகையில், ‘‘அரசு ஊழியர்களின் நீண்ட கால மனக்குறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்த்து வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்வுபெறும் நிலை ஏற்படும், இந்த ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும் இதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிததுக் கொள்கிறேன்" என்றார்.


thanks to: 
http://www.tnkalvi.com/2013/07/3000-60.html   Tamilnadu Teachers Friendly Blog  .

========================================================
அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
  மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநிலஅரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி..,) வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வெளியாகும் அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் 18 ல், 8 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
  மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 72 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இதை 8 சதவீதம் உயர்த்தி 80 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியான உடன், அதை அனுசரித்து மாநில அரசும் அறிவிப்பு வெளியிடும். மத்திய அரசு ஏற்கனவே தாமதமாக அறிவித்துள்ள நிலையில், விரைவில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த, அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

 THANKS: http://www.tnkalvi.com/2013/04/blog-post_4171.html




===========================================================
எமக்கு எப்போது விடியும்???.
                            ===============================================

 அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டாலும்,
தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, உடனேஅறிவிக்கப்படுவதில்லை. 
அறிவித்தாலும் 
[அல்லது]
அரசு ஒப்புதல் கொடுத்தாலும் ,  
செயல்படுத்துவதற்கு  
சொந்த நிதிஆதாரம் இல்லை என,
போக்குவரத்துக்கழகங்கள் கைவிரிக்கின்றன
 சமூகத்தின் எந்த பிரச்சனைக்கும், 
{ஜாதி, மத, குடிநீர், சுடுகாடு----- 
உட்பட 
எந்த பிரச்சனைக்கும்.} 
முதல்கல்லடி எமக்குத்தான். 
தீவைப்பும் எமக்குத்தான். 
ஆனால், 
அகவிலைப்படி உயர்விலாகட்டும்,
ஊதிய ஒப்பந்தத்திலாகட்டும்,
ஓய்வு
பெற்றபோக்குவரத்துதொழிலாளர்களின்,
ஓய்வூதியம்,
பணிக்கொடை,
விடுமுறைசம்பளம்,
வருங்கால வைப்புநிதி, 
{மேலும்படிக்க இங்கேசொடுக்கவும் ttsftnstc-பென்ஷன்}
சமூகத்தின் முதல்பலிகடா அரசுப்பேருந்து
போன்றவற்றிலாகட்டும்,
முதல் பலிகடாவும் நாங்கள்தான் .
எமக்கு எப்போது விடியும்???. தீர்வுதான் என்ன?????
========================================================================





1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டாலும்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உடனே
அறிவிக்கப்படுவதில்லை.அறிவித்தாலும்[அரசு ஒப்புதல் கொடுத்தாலும்] , செயல்படுத்துவதற்கு சொந்த நிதிஆதாரம் இல்லை என, போக்குவரத்துக்கழகங்கள் கைவிரிக்கின்றன .

சமூகத்தின் எந்த பிரச்சனைக்கும், {ஜாதி, மத, குடிநீர், சுடுகாடு----- உட்பட எந்த பிரச்சனைக்கும்.} முதல்கல்லடியும் எமக்குத்தான். தீவைப்பும் எமக்குத்தான். .ஆனால் அகவிலைப்படி உயர்விலாகட்டும், ஊதிய ஒப்பந்தத்திலாகட்டும் ,ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் பணிக்கொடை, விடுமுறை சம்பளம், வருங்கால வைப்பு நிதி,ஓய்வூதியம் -{ http://ttsftnstc.blogspot.in/2013/06/blog-post_25.html }போன்றவற்றிலாகட்டும் முதல்பழிகடாவும் நாங்கள்தான் . எமக்கு எப்போது விடியும்???.

அன்புடன்
Kandhpraba { www.facebook.com/kandh.praba?ref=tn_tnmn }