20/2/15

மனம் குளிருமா?.மாய்மாலமா?.


சென்னை:
''போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது. அப்போது, அவர்கள் மனம்
நிறைவு பெறும் வகையில் ஒப்பந்தம் போடப்படும்,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அவர், சட்டசபையில் பேசியதாவது:போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாக, 2010ல், தி.மு.க., தொழிற்சங்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 'எந்த சங்கம் அதிக ஓட்டு வாங்குகிறதோ அந்த சங்கத்துடன், அரசு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டது.

ஒப்பந்தம்:அதன்படி, அப்போதைய தி.மு.க., அரசு, தி.மு.க., தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது.எனவே, அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச சம்மதம் தெரிவித்து நீதிமன்றத்தில் கடிதம் கொடுக்கும்படி, தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், அவர்கள் கடிதம் கொடுக்க, ஒன்றே கால் ஆண்டுகளாகி விட்டது. மற்ற தொழிற்சங்கங்கள் நிர்பந்தம் காரணமாக, கடந்த மாதம் கடிதம் கொடுத்தனர்.
கடிதம்:
கடிதம் கொடுத்ததும் பேச்சுவார்த்தை நடத்த, அரசு தரப்பில், 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதேபோல், தொழிற்சங்க நிர்வாகிகள், 16 பேர் கொண்ட குழு அமைக்கும்படி, தொழிற்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.அந்த குழுவினருடன், மார்ச் 2ம் தேதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இப்பேச்சுவார்த்தை யில், தொழிலாளர்கள் மனம் நிறைவு பெறும் வகையில் ஒப்பந்தம் போடப்படும்.போக்குவரத்து தொழிலாளர் பேச்சுவார்த்தை தாமதத்திற்கு, தி.மு.க., தொழிற்சங்கமே காரணம்.இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: