25/2/15

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம்

நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம் சட்டம்,கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.

இப்போது இந்த சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.


இந்த அவசர சட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருவதாககும் கூறப்பட்டது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம், ஏழை விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்றும், தொழில் அதிபர்களுக்கு ஆதரவானது என்றும் அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் சட்ட திருத்தத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன என்று பார்க்கலாம்.

ஏற்கனவே உள்ள சட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் போது சில குறிப்பிட்ட விஷயங்களுக்காக நிலம் கையகப்படுத்தினால், அதற்கு நிலம் உரிமையாளர்களிடம் 80 சதவீத முன் அனுமதி கேட்க தேவை இல்லை என்று சட்டத்தின் 10(ஏ) என்ற விதி கூறுகிறது. இதில் இப்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது, 5 பிரிவுகளுக்காக நிலம் கையகப்படுத்தும் போது, நிலத்தின் உரிமையாளரின் 80 சதவீத அனுமதி பெறத் தேவை இல்லை.

அவை –

1. தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.

2.ராணுவம் தொடர்பானவை.

3. மின்சார திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள்.

4. தொழில் பூங்காக்கள்.(இனடஸ்டிரியல் காரிடார்ஸ்)

5. ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் (தனியார்–அரசு, பங்களிப்புடன் கூடிய திட்டங்களான இவற்றில் நிலத்தின் உரிமை மத்திய அரசிடமே தொடர்ந்து இருக்கும்)

நிலத்தை கயகப்படுத்தும் போது அந்த நிலம் விவசாம் செய்வதற்கு உரிய நிலமா என்பது கவனிக்க்ப்படவேன்டும் என்று முன்பு இருந்த சட்டட்த்தில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது கொ0ண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தில், மேற்கண்ட 5 அமைப்புகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும்போது அந்த நிலம் விவசாயம் செய்கின்ற நிலமா என்பதை பார்க்கத் தேவை இல்லை.

அதாவது, மேற்கு வங்காளத்தில் சிங்ரூர் என்ற இடத்தில் விவசாய நிலம் கையகப்படுத்தியம்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், புதிய சட்ட திருத்தத்தில், நிலத்தை கையகப்படுத்தும்போது அது விவசாயம் செய்யும் நிலமா அல்லது புறம்ப்போக்கா என்பதை பார்க்கத் தேவை இல்லை. அதாவது செழிப்பான விவசாய நிலத்தைக்,கூட கையகப்படுத்த முடியும்.

கடந்த காலத்தில் உள்ள சட்டத்தின்படி நிலத்தை கையகப்படுத்தும்போது, அதனால் யார், யார் பாதிக்கப்படுவார்கள் என்று பார்த்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதாவது நிலத்தின் உரிமையாளர் தவிர அங்கு பணிபுரியும் விவசாயிக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

ஆனால், புதிய சட்ட திருத்தத்தின்படி, நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும்.

கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டப்படி. நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்க்ப்பட்டவர்களுக்கு, இழப்பீடு, புணரமைப்பு மற்றும் மறு குடியேற்றம் தொடர்பாக ஒரே மாதிரியான திட்டம் இல்லை.

ஆனால், அவசர சட்டம் மூலம், கீழ்க்கண்ட 13 சட்ட பிரிவுகளும் இதில் இணைக்கப்பட்டு, அவற்றும் இழப்பீடு, புணரமைப்பு, மறுகுடியேற்றம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்லது.

அவை வருமாறு:–

1.நிலக்கரி வளம் உள்ள பகுதிகள் கையகப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி சட்டம் 1957.

2. தேசிய சாலை சட்டம் 1956.

3. நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கம்) சட்டம் 1885.

4. அணுசக்தி சட்டம் 1962.

5. இந்திய டிராம்வே சட்டம் 1886.

6. ரெயிவே சட்டம் 1989.

7. பழங்கால நினைவகங்கள், தொல்பொருள் ஆய்வு சட்டம் 1958.

8.பெட்ரோலியம், கனிமவள பைப்லைன் சட்டம் 1962.

9.தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேசன் சட்டம் 1948.

10.மின்சார சட்டம் 2003.

11. அசையா சொத்து கேட்பு மற்ரும் கைப்பற்றுதல் சட்டம் 1952.

12. நிலம் கையகப்படுத்துவதால் இடம் பெயர்ந்தோர்களுக்கான மறுகுடியேற்றம் சட்டம் 1948.

13. மெட்ரோ ரெயில்வே கட்டுமான வேலை சட்டம் 1978.

மேற்கண்டவகைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் போதும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு, புணரமைப்பு, மறுகுடியேற்ற சலிகைகள் கிடைக்கும்.

நிலம் கையகப்படுத்தும் போது அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு, நகர்ப்புர நிலம் என்றால், மார்க்கெட் விலையில் 4 மடங்கும், ஊரகபகுதி நிலம் என்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மார்க்கெட் விலையில் இரன்டு மடங்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று முந்தைய சட்டத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று பல கோரிக்கைகள் விடப்பட்டன. ஆனால் புதிய சட்டதிருத்தத்திலும் இதே அளவு இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம், பிரதமர் மோடியின் கனவு திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் என்பதை நிறைவேற்றுவதற்காக அதிக அளவு முதலீடுகளை எதிர்பார்க்கும் நோக்கில் தொழில் அதிபர்களுக்கு சலுகை வழங்குவதாகவும், ஏழை தொழிலாளிகளை பாதிக்கும் வகையிலும் இருப்பதாகவும் எதிக் கட்சிகள் கூறி, அவசர சட்டத்தை எதிர்க்கின்றன.

================

கருத்துகள் இல்லை: