3/3/15

பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: (12-3-2015)வெடித்தது கலவரம்:



      சென்னையில் நேற்று, போக்குவரத்து கழக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது. இருப்பினும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.



   

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த, 11ம் தேதி துவங்கியது. இதில், கோரிக்கை மனு மட்டுமே ஏற்கப்பட்டதால், ஏமாற்றமடைந்த தொழிற்சங்க நிர்வாகிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
மார்ச், 3ம் தேதி (இன்று) அல்லது அதற்கு பிந்தைய பொருத்தமான தேதியில், வேலை நிறுத்தத்தை துவங்குவதாக அறிவித்தனர்.இந்த பரபரப்பான சூழலில், அரசு அறிவித்தப்படி, நேற்று, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், பேச்சுவார்த்தை நடந்தது.போக்குவரத்து துறை செயலர் பிரபாகர் ராவ் தலைமையில், 14 பேர் கொண்ட அரசு குழு தயாராக இருந்தது. 12:15 மணியளவில், ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட, தொ.மு.ச., - சி.ஐ.டி.யூ., டி.டி.எஸ்.எப்.,
உள்ளிட்ட, 11க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், 1000க்கும் மேற்பட்ட ஊழியர் படையுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.
ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும், 2 நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டனர்.
      அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
மதியம், 12:30 மணிக்கு பேச்சுவார்த்தை துவங்கியது.அப்போது, ஏற்கனவே, 11வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நிறைவேற்றாத கோரிக்கைகள் பற்றி பேசினர். அனைத்து தொழிற்சங்க
கோரிக்கைகளையும், அரசு குழு கேட்டறிந்தது.
மாலை, 5:15 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. பின், வரும், 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

வெடித்தது கலவரம்:        பேச்சுவார்த்தையின் முடிவை தெரிந்துக் கொள்ளும் ஆவலில், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., -சி.ஐ.டி.யூ.,   டி.டி.எஸ்.எப்.,உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க ஊழியர்களும் காத்து இருந்தனர்.
பேச்சுவார்த்தை யில் நடந்தது என்ன என்ற புரிதல்இல்லாத ஊழியர்கள் சிலர், திடீரென கல்வீச்சு சம்பவத்தில் இறங்கினர்.
இது அண்ணா தொழிற்சங்கம் - பிற சங்க ஊழியர்களுக்கு இடையிலான மோதலாக வெடித்தது.இரு தரப்பினரும், 15 நிமிடங்கள் கல்வீசி தாக்கிக் கொண்டனர்.இந்த சம்பவத்தில், அரசு அதிகாரிகளின், 6 வாகனங்கள்; தொழிற்சங்கத்தை சேர்ந்த, இரண்டு வாகனங்கள் என மொத்தம், எட்டு வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
 சிலருக்கு காயம் ஏற்பட்டது.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மாலை, 5:45 மணிக்கு நிலைமை சீரானது.எந்த பிரச்னையும் இல்லைஇது குறித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொருளாளர் நடராஜன் கூறியதாவது:பேச்சுவார்த்தை துவக்கத்தில் சில சிறிய சங்கத்தினர், எங்கள் சங்கத்தை தரம் குறைத்து பேச முற்பட்டனர். இதை, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளே எச்சரித்து, சரி செய்ததால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
ஆனால், வெளியே சரியான புரிதல் இல்லாமல் ஊழியர்கள் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அமைதியாக திரும்புமாறு கேட்டுக்
கொண்டு உள்ளோம்.

முதற்கட்ட பேச்சுவார்த்தையில், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.

 12ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில், 21 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச உள்ளோம்.மார்ச், 3ம் தேதி (இன்று) . பஸ்கள் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

பேச்சுவார்த்தையில் என்ன:

*கடந்த, 2013, பிப்ரவரியில் நடந்த அகில இந்திய போராட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள், 900 பேர் பதவி உயர்வில் நீடிக்கும் சிக்கல்.
*ஏற்கனவே, 11வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உள்ள அம்சங்களை, நிர்வாகம் நடை
முறைப்படுத்தாமல் வைத்திருப்பது.*வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட, நான்கு நாட்களுக்கு,'ஆப்சென்ட்' போடப்பட்டது.
*கடந்த, 2003 ஏப்ரல், 1ம் தேதிக்கு மேல் பணியில் சேர்ந்தவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம்
வழங்குவதில் உள்ள சிக்கல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு தொழிற்சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.இவை அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, போக்குவரத்து துறை செயலர் பிரபாகர் ராவ் நம்பிக்கை அளித்ததாக, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.


======================

கருத்துகள் இல்லை: