9/3/15

பிஆர்டிசி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பிஆர்டிசி ஊழியர்கள் நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைத் தோல்வி:
 வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு.


    மார்ச் 9:
       புதுச்சேரி அரசு பிஆர்டிசி ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்தது.

  புதுச்சேரி அரசு பிஆர்டிசி கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அலுவலக மற்றும் பணிமனை ஊழியர்கள் என 700க்கும் மேற்பட்டோருக்கு மாதந்தோறும் குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, வங்கியில் பெற்ற கடன் ஆகியவற்றிற்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி  கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 120க்கும் மேற்பட்ட அரசு பேரூந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.


   இந்நிலையில் இன்று பிற்பகல் போக்குவரத்துக்கழக தலைவர் ஞானசேகரன் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிதி காரணமாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் உத்தரவாதத்தை ஏற்க தொழிற்சங்கத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.
   இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் போடும்வரை வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் எனவும் மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று மாலை கூடி முடிவு செய்யப்படும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

09/03/2015

கருத்துகள் இல்லை: