12/3/15

மார்ச்-20:மூன்றாம் கட்டபேச்சு வார்த்தை.

  சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்துக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது. தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

  போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது 42 தொழிற்சங்கத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன. பின்னர் தொழிற்சங்கங்களின் கோரிக்கைளை ஏற்று, மார்ச் 2-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது.
   இருந்தபோதும், பேச்சுவார்த்தை அரங்குக்கு வெளியே 
ஆளும் தரப்பு சங்கத்திற்கும்,
பிற தொழிற்சங்கத்திற்கும்
இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி, அவர்களைக் கலைத்தனர்.
இந்த நிலையில், ஊதிய ஒப்பந்தத்துக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. இதில் 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். பிற்பகல் 2 மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
   இதில், முதல் கட்ட பேச்சுவார்த்தையில் வாக்குறுதி அளித்தபடி நிர்வாக ரீதியிலான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது குறித்தும், அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
மற்ற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும். அரசின் அனுமதி கிடைத்ததும், அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு தொழிற்சங்கத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது.
   இது குறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிஐடியூ மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் சட்டப் பேரவை உறுப்பினருமான சௌந்தரராஜன் கூறியது:
   இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெற்றது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்படும், தினக் கூலி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் உயர்த்தித் தரப்படும், 240 நாள்கள் பணித முடித்தவர்களுக்கு பணி நிரந்தரத்துக்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும், கருணை அடிப்படையில் பணிக்குச் சேருபவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும், ஊழியர்களுக்கான சலவைப் படி, தையல் படி உள்ளிட்ட படிகள் உயர்த்தி வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும் மீதமுள்ள கோரிக்கைகள் தொடர்பாக வரும் 20-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

போலீஸ் பாதுகாப்புடன் பேச்சுவார்த்தை:

சென்னை குரோம்பேட்டை மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்துக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நடைபெற்றது.
கடந்த 2-ஆம் தேதியன்றுஇ முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடந்தபோது,
  ஆளும் தரப்பு சங்கத்திற்கும்,
பிற தொழிற்சங்கத்திற்கும்
இடையே மோதல் ஏற்பட்டது.




====================

==============



===============


==============

============

கருத்துகள் இல்லை: