3/12/14

வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014]

       தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின்
          வேலை நிறுத்த அறிவிப்பு மாநாடு-திருச்சி[2-12-2014]
             ======= ====== ======  ======   =================
  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே நடத்தகோரி அனைத்து சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் போராட்ட அறிவிப்பு மாநாடு திருச்சி தென்னூர்
உழவர் சந்தை மைதானத்தில் .02-12-2014- செவ்வாய்க்கிழமை
மாலை நடந்தது.
மாநாட்டிற்கு

 தொமுச பேரவை பொருளாளர் நடராஜன் தலைமை
வகித்தார். சிஐடியு சம்மேளன பொது செயலாளர் ஆறுமுக நயினார்
முன்னிலை வகித்தார்.
 தொமுச பொது செயலாளர் பாரதி தாசன் வரவேற்றார்.
 முன்னதாக மலைக்கோட்டை கிளையில் இருந்து மதியம்
2.50 மணி அளவில் தொடங்கிய பேரணியில்,
25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர்.
தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் பேரணி முடிவடைந்தது.
   இந்த பேரணியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின்
{LPF,CITU,TTSF,AITUC,MLF,DMWF,PMK,HMS,INTUC,ALLF,BMS.}
உட்பட11 தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள்
எழுச்சியுடன் கலந்துக்கொண்டனர்.

மாநாட்டில் தொ.மு.ச. மாநில பொது செயலாளர் சண்முகம்,
சி.அய்.டி.யு.சங்க மாநில தலைவர் சவுந்தர் ராஜன் எம்.எல்.ஏ.,
 ஏ.அய்.டி. யு.சி.மாநிலபொதுச் செயலாளர் லெட்சுமணன்,
பணியாளர்கள் சம்மேளன மாநிலபொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன்
உள்படபலர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சவுந்தர்ராஜன்
எம்.எல்.ஏ. செய்தியாளர் களிடம் கூறியதாவது:




 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 லட்சம்
தொழிலாளர் களின் ஊதிய உயர்வு, பணி நிலைகள் உள்ளிட்ட இதர வசதிகள் வழங்க வழி செய்யும் ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறை படுத்தப்பட்டிருக்க வேண் டும். ஆனால் நடைமுறை படுத்தவில்லை. இது தொடர்பாக பலமுறை பேராட்டம் நடத்தியும் இன்று வரை பேச்சுவார்த் தைக்கும் அரசு அழைக்க வில்லை.

 மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலை போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு
சட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்
களுக்கு ஏற்படும் பாதிப்பு களை உணர்ந்து அந்த சட்டத்தை திரும்ப பெற
வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து
போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில்
வருகிற 15ஆம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி 19ஆம் தேதியோ, அல்லது அதற்கு பின்னரோ, மாநிலம் தழுவிய அளவில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

மேலும் போராட்டம் குறித்த முழு அறிவிப்பு வருகிற 5ஆம் தேதி அறி
விக்கப்படும். முன்னதாக நாளை (4ஆம்தேதி) நடை பெறும் சட்டமன்ற கூட்ட தொடரில் அனைத்து கட்சிகளின் ஆதரவை திரட்டி போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச் சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து ஊழியர் களின் ஊதியத்தை பிடித்து சுமார் ரூ.4 ஆயிரம் கோடி
முறைகேடு நடை பெற் றுள்ளது. தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் வழங்கப் படாததால் தான் இங்கு
பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்திற்கு தயா ராகி திரண்டுள்ளனர் என்றார்.
முடிவில்:   சிஐடியு பொதுச்செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.

 ==============================================

===============================================
 
===================================

கருத்துகள் இல்லை: