31/12/14

சாலைமறியல் 3000-பேர்கைது


தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்த விவரம்:



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில
பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை சாலை மறியல், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதாக மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அரசு ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், அரசு பேருந்துக்கள் மீது கற்களை வீசியதாகவும் ஆயிரம் பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: