27/12/14

முத்தரப்பு பேச்சுவார்த்தை(26-12-2014).

              
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.


 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தும் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க.வின் தொ.மு.ச(எல்.பி.எப்.) சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  இந்தநிலையில்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும்
தொ.மு.ச.சி.ஐ.டி.யூ.,டி.டி.எஸ்.எப்.ஏ.ஐ.டி.யூ.சி.ஐ.என்.டி.யூ.சி.எச்.எம்.எஸ்.பி.எம்.எஸ்.எம்.எல்.எப்.,ஏ.ஏ.ஏல்.எப்.தே.மு.தொ.சபாட்டாளி தொழிற்சங்கம்ஆகிய 11 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் கடந்த 22-ந்தேதி சென்னையில்,
 நடைபெற்றது.
   கூட்டத்தில்போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வுபணி நிரந்தரம்ஓய்வூதியம் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ந்தேதி வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சமரச முத்தரப்பு பேச்சுவார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பை தொடர்ந்துஅவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படிசென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில்தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் முதற்கட்ட சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில்போக்குவரத்து நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பர்ட் தினகரன்சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சவுந்திரராஜன் உள்பட அதிகாரிகளும்,தொழிற்சங்கங்கள் தரப்பில்தொ.மு.ச.சி.ஐ.டி.யூ.,டி.டி.எஸ்.எப்.ஏ.ஐ.டி.யூ.சி.ஐ.என்.டி.யூ.சி.எச்.எம்.எஸ்.,பி.எம்.எஸ்.எம்.எல்.எப்.ஏ.ஏ.ஏல்.எப்.தே.மு.தொ.சபாட்டாளி தொழிற்சங்கம்ஆகிய11 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை குறித்த விளக்கம்
தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு தொடங்கிய முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை இரவு 6.50 மணி வரை 3 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உடனடியாக தொழிற்சங்கங்கள் தரப்பிலோஅரசு தரப்பிலோ எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் சென்னை பல்லவன் சாலையில் அமைந்துள்ள மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு இரவு 7.10 மணியளவில் சென்றனர்.

அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்களிடம்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள், ‘பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது குறித்து விளக்கினர்.

பல்வேறு கோரிக்கைகளுக்கு இசைவு

அப்போதுசி.ஐ.டி.யூ தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ.தொழிலாளர்களிடம் பேசியதாவது:-

ஊழியர்கள் தரப்பில், 2013 செப்டம்பர் 1-ந் தேதி முதல் ஊதிய உயர்வு குறித்து கேட்டோம். அந்த ஊதிய உயர்வை நிலுவைத் தொகையின்றி அனைத்தையும் வருகிற மாத சம்பளத்துடன் இணைத்து கேட்டோம். அதற்கு அவர்கள் மாத சம்பளத்துடனோஅல்லது பொங்கலுக்குள்ளோ தருவதாக உறுதி கூறினார்கள். 240 நாட்கள் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு கூறினோம்இதற்கும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

விடுமுறை எடுத்துவிட்டுஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு அப்சென்ட்’ போட்டிருந்தார்கள். இவற்றை ரத்து செய்துவிட்டுசம்பளம் பிடித்தமில்லாமல் விடுமுறைகளில் கழித்துவிடும்படி கூறினோம்,அதற்கும் அவர்கள் இசைந்தனர். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 5 வருடமாக மாற்றுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனை 3 வருடமாக குறைக்க வேண்டும் என்று கூறினோம்அதனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை

அதனை தொடர்ந்துஇரவு 7.40 மணி முதல் 9.30 மணி வரை தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியில் வந்ததொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழிலாளர் நலத்துறை கமிஷனர் தொலைபேசி வழியாக எங்களிடம் பேசும்போதுமீண்டும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்போம் என்று கூறினார். இதனையடுத்து அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை (இன்று) காலை 11 மணிக்குதொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

பேச்சுவார்த்தை முன்னேற்றத்தின்படிஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். சுமுகமான தீர்வு கிடைக்கும் வரைஎங்களது போராட்டம் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடரும். தொழிலாளர் வேலை நிறுத்த விளக்க பொது கூட்டமும் நாளை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்ட விளக்க பொதுக்கூட்டம்பல்லவன் இல்லம் முன்பு நேற்று பிற்பகல் 3.30 மணியில் இருந்து இரவு 7.30மணி வரை நடைபெற்றது. இதில் பலஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கு பெற்றனர். இதனால் பல்லவன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
===========================================

கருத்துகள் இல்லை: